குற்றவாளியே நீதிபதியானான்| Tamil Christian Message

கிளாட் கிரே பில்லன் என்பவன் பிரெஞ்சு நாட்டுக் குடிமகன். இவன் 1707-ஆம் ஆண்டு முதல் 1777-ஆம் ஆண்டு வரை உயிர் வாழ்ந்தவன். இவன் சிறு வயதாக இருக்கும்போது பல தவறுகள் செய்து சிறைத்தண்டனை அனுபவித்து உள்ளான். ஒரு சமயத்தில் மக்களின் ஒழுக்கத்தைக் கெடுக்கக் கூடிய ஆபாசமான புத்தகங்கள் எழுதத் தொடங்கினான். இதைத் தெரிந்து கொண்ட காவல் துறையினர் இந்தத் தீய குற்றத்திற்காக சிறைத்தண்டனை அளித்தனர். சிறைத் தண்டனைக்குப் பிறகு 5 ஆண்டுகள் நாடு கடத்தப்பட்டான். நாடு கடத்தப்பட்ட போது தனது தவறுகளை உணரத் தொடங்கினான். சிறுவயது முதல் தான் செய்து வந்த தவறுகளை எண்ணி வருந்தினான். எப்படியாயினும் கடுமையாக உழைத்து நல்ல நிலையை அடைய வேண்டும் என்று விரும்பினான். கல்வியறிவு உள்ள பட்டங்கள் பல பெற்றான். இறுதியில் பிரெஞ்சு நாட்டினுடைய புகழ் விளங்குமாறு, அந்நாட்டின் மிகக் கடுமையான சென்சார் (Judge) அதிகாரியானான். ஆபாசப் புத்தங்கள் எழுதியவன் சென்சார் (judge) அதிகாரியாக மாறியதற்குக் காரணம் மனமாற்றமும், கடுமையான உழைப்புமேயாகும். இயேசு உலகத்திலே வந்த எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற மெய்யான ஒளி.

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create