ஒரு வீட்டில் மூன்று குழந்தைகள். அவர்களுக்கிடையே கடுமையான விவாதம். தங்கள் வீட்டு செல்லக்கிளி இறந்துபோனால் அதை எங்கே புதைப்பது? வீட்டுக்கு முன்னால் என்றான் பெரியவன். வீட்டுக்குப் பின்னால் என்றான் இளையவன். ஊருக்குப் பொதுவான கல்லறையில் என்றான் கடையவன். இவர்களின் வாக்குவாதம் முற்றியது. கூச்சலானது. குழப்பமானது. வாய்ச் சண்டையானது. பின்னர் கைச் சண்டையானது. அதுவும் முற்றி கம்புச் சண்டையானது. மண்டை உடைந்தது. தந்தை வந்தார். நடந்ததைக் கண்டு விழுந்து, விழுந்து சிரித்தார். அட பிள்ளைகளே நாம் இன்னும் கிளியே வாங்கவில்லையே. வாங்கலாமா என்று பேசிக்கொண்டிருந்தோம். அதற்குள் நீங்கள் இப்படி சண்டை போட்டு உங்கள் மண்டையை உடைத்துவிட்டீர்களே என்றார். இன்றும் இயேசு கிறிஸ்து தங்கள் வாழ்க்கையில் இல்லாமல் பலர் தங்கள் மண்டைகளை உடைத்துக் கொண்டு வாழ்கின்றார்கள். இவர்கள் இயேசு கிறிஸ்துவை அறிந்தால் எத்தனை சந்தோஷமாக இருக்கும்.