உங்களில் இருப்பவர் பெரியவர்| Tamil Christian Message

பூங்கா ஒன்றில் அமர்ந்திருந்த சிறுவன் கையில் வேதாகமத்தை வைத்துக்கொண்டு உரத்த குரலில் ஆண்டவரைத் துதித்துக் கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த விஞ்ஞானி ஒருவர், எதற்காக உன் தேவனை இப்படி சத்தமிட்டு துதிக்கிறாய், என்றார். சிறுவன் கூறினான்: ""என் ஆண்டவர் செங்கடலை இரண்டாகப்பிளந்து, தம் ஜனமாகிய இஸ்ரவேலரை வழிநடத்தியிருக்கிறார் என்று வாசித்தேன்; அதனால் தான் அவரைத் துதிக்கிறேன்'' என்றான். விஞ்ஞானி கூறினார்: ""நீ நினைப்பதுபோல, செங்கடல் ஆழமான கடல் இல்லை; அது வெறும் 10 இன்ச் ஆழம் மட்டுமே கொண்டது. அதைப் பிரிப்பதும், இஸ்ரவேலரை வழிநடத்துவதும் ஒன்றும் பெரிய காரியமில்லை. ஆகவே, இதில் உன் ஆண்டவரைப் புகழ்ந்து பாட ஒன்றுமில்லை''. வேதத்தைப் பொறுத்தமட்டில் அவன் கண்களைத் திறந்துவிட்டோம் என்று மகிழ்ந்தார் விஞ்ஞானி. அடுத்த நிமிடம் மீண்டும் பாடித் துதிக்க ஆரம்பித்தான் சிறுவன். சத்தம் கேட்டு திரும்பிய விஞ்ஞானி, ""இனியும் ஏன் துதிக்கிறாய்?'' என்றார். சிறுவன் கூறினான்: ""இஸ்ரவேலரைத் தண்ணீரின் நடுவே நடத்தியது மட்டுமின்றி, பார்வோனையும், அவனது இரதங்களையும் குதிரை வீரரையும் அந்த 10 இன்ச் மட்டுமே ஆழமான கடலில் மூழ்கி மடிந்துபோகப் பண்ணின ஆண்டவர் எவ்வளவு பெரியவர்? அதை எண்ணித் துதிக்கிறேன்'' என்றான். விஞ்ஞானியின் முகம் போன போக்கைப் பார்க்க வேண்டும்!

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create