கொள்ளைக்காரன் மாட்டிகொண்டான்| Tamil Christian Message

ஒரு கொள்ளைக்காரன் கடற்கரையோரமாகக் கட்டப்பட்டிருந்த ஒரு வீட்டைத் திருட்டு வேலைக்கு உபயோகித்தான். குடியிருக்கவில்லை; கொள்ளையடித்த பொருட்கள் எல்லாவற்றையும் அந்த வீட்டின் மத்திய அறையில் கொண்டு குவித்து வைத்திருந்தான். அந்த அறையில் தான் இளைப்பாறுவான். அப்படி இளைப்பாறுகின்ற நேரத்தில் அந்த அறை சுவரில் வேதாகம வார்த்தையுடைய பலகை ஒன்று எழுதப்பட்டிருந்தது. அதைப் படித்த அந்த திருடனுக்கு மனசாட்சியில் குற்ற உணர்வு ஏற்பட்டு அந்த வேத வசனத்தை அவன் பார்க்கத் துணியாமல் அதை சுவர்ப்புறமாகத் திருப்பிவைத்துவிட்டான். நான் செய்கிற தீய செயல்களை குறித்து இயேசு கிறிஸ்துவாகிய மீட்பர் ஏன் பேசவேண்டும் என்று அப்படிச் செய்தான். தேவனுடைய சத்தத்தை அடக்கி விட்டதாகப் பெருமூச்சுவிட்டான். ஆனால் அவனுடைய கைரேகை அதிலே பதிவாகி மாட்டிகொண்டான். ஆம்! தேவன் நாம் செய்கிற எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு மறைவானவைகள் ஒன்றுமில்லை. அவர் நம்மிடம் பேசுகிறார்.நாம் பாவம் செய்திருப்போமானால் தேவனிடமாகத் திரும்பி, பாவ அறிக்கை செய்து விட்டுவிட்டால் நமது பாவங்களை மன்னித்து நம்மை சுத்திகரித்து ஏற்றுக்கொள்ள அவர் எப்போதுமே ஆயத்தமாயிருக்கிறார். (1யோ. 1:9). அவருடைய இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி சுத்திகரிக்கும் என்று வேதத்தில் வாக்குத்தத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆமென்.

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create