( குறுகிப் போவதில்லை
நீ குறைந்து போவதில்லை
சிறுமைப்படுவதில்லை நீ
தாழ்வு அடைவதில்லை )
யெகோவா தேவன்
உன்னுடன் இருக்க
தாழ்ச்சி அடைவதில்லை - நீ
தளர்ந்து போவதில்லை
கர்த்தரின் கைகள் குறுகவே இல்லை
கர்த்தரின் வாக்கு மாறவே இல்லை -2
உன்னை அழைத்த உண்மை தேவன்
பெருகச் செய்திடுவார்
உள்ளங்கையில் வரைந்த தேவன்
உன்னை உயர்த்திடுவார் -2
வாக்குத்தத்தம் செய்த தேவன்
உன்னை என்றும் மறப்பதில்லை மறப்பதில்லை -2
தாயைப் போல தேற்றும் தேவன்
ஏந்தி நடத்திடுவார்
தந்தை போல சுமக்கும் தேவன்
தாங்கி நடத்திடுவார் -2
நேற்றும் இன்றும் மாறா தேவன்
கிருபையால் உன்னை மூடிக்கொள்வார் -2
ஆபிரகாமின் தேவன் உன்னை ஆசீர்வதித்திடுவார்.....
இஸ்ரவேலின் தேவன் உன்னை
என்றும் நடத்திடுவார் -2
( குறுகிப் போவதில்லை
நீ குறைந்து போவதில்லை
சிறுமைப்படுவதில்லை
நீ தாழ்வு அடைவதில்லை )
யெகோவா தேவன் உன்னுடன் இருக்க
தாழ்ச்சி அடைவதில்லை - நீ
தளர்ந்து போவதில்லை
Kirugi povathillai lyrics songs, Kirugi povathillai song lyrics, Kirugi povathillai Lyrics Song Chords PPT - குறுகிப் போவதில்லை , tamil christian songs lyrics
TRUE
TRUE