பிறந்த பலனை நீ அறிந்திட வேண்டுமென்றால்
இறைவன் இயேசுவை தெரிந்துக்கொள்வாய்
சிறந்த வாழ்வை நீ காண வேண்டுமென்றால்
சிலுவையில் தொங்கிடும் இயேசுவை பார்
– பிறந்த
நிரந்திரமில்லாத உலகத்தில் மன
நிம்மதி காண ஒரு வழியுண்டு
அது நானே வழியும் சத்தியமும் ஜீவனும்
உரைத்திட்ட இயேசுவின் பதிலுண்டு
உலகம் முழுவதும் நீ ஆதாயம்
ஆக்கிக் கொண்டாலும் பயமென்ன
விலைமதிப்பில்லா உன் ஆத்துமா
அழிந்தால் உனக்கு உண்டாகும் இலாபமென்ன
பல கலைகள் கற்று பெரும் புகழும் பெற்று
பணத்தில் மிதந்தாலும் பலனென்ன
அழிந்துடும் உலகில் அழியா மீட்பரை
அறியாது வேறு வழியென்ன
– பிறந்த
பக்தர்கள், முக்தர்கள், சித்தர்கள் அனைவரும்
நித்திரை அடைந்தார் உலகறியும்
இத்தரையில் பரிசுத்தராம் இயேசு
மரித்துயிர் எழுந்தார் நாம் அறிவோம்
சத்தியம் அறியா மாந்தர்கள் வாழும்
இச்ஜகத்தினில் எங்கும் சென்றிடுவோம்
நித்திய ஜீவன் அளித்திடும் இயேசு
இரட்சகர் நற்செய்தி உரைத்திடுவோம்
Pirandha palanai nee arindhida Lyrics Song, Pirandha palanai nee arindhida Song lyrics, Pirandha palanai nee arindhida Lyrics Song Chords PPT - பிறந்த பலனை நீ அறிந்திட
Sign in to access this feature Sign Up
Pirandha palanai nee arindhida vendumendral
Iraivan Yesuvai therindhukolvai
Sirandha vaazhvai nee kaana vendumendral
Siluvaiyil thongidum Yesuvai paar
Nirandhiramilladha ulagaththil mana
Nimmathi kaana oru vazhiyundu
Adhu naaney vazhiyum saththiyamum jeevanum
Uraiththitta Yesuvin pathilundu
Ulagam muzhuvadhum nee aadhaayam
Aakkik kondaalum bayamenna
Vilaimadhippilla un aaththumaa
Azhindhaal unakku undaagum ilaabamenna
Pala kalaigal katru perum pugazhume perthu
Panaththil midandhaalum palanenna
Azhindhudum ulagil azhiya meetparai
Ariyaadhu veru vazhiyenna
Bakthargal, mukthargal, siththargal anavargalum
Niththirai adaindhaar ulagarriyum
Iththaraiyil parisuththaraam Yesu
Mariththu uyir ezhundhaar naam arivom
Saththiyam ariya maanthargal vaazhum
Isjagaththinil engum sendriduvoom
Niththiya jeevan aliththiduvaan Yesu
Iratchakar narseythi uraiththiduvoom
TRUE
TRUE
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List