Virundhai Seyrumeyn -154- Pamalai Song Lyrics PPT

1. விருந்தைச் சேருமேன், அழைக்கிறார்;
ஆகாரம் பாருமேன், போஷிப்பார்;
தாகத்தைத் தீர்க்கவும்
இயேசுவின் மார்பிலும்
சாய்ந்திளைப்பாறவும்
வா, பாவி, வா.

2. ஊற்றண்டை சேரவும், ஜீவனுண்டாம்;
பாடும் விசாரமும் நீங்கும் எல்லாம்;
நம்பி வந்தோருக்கு
திருப்தி உண்டாயிற்று;
ஜீவாற்றின் அண்டைக்கு
வா, பாவி, வா.

3. மீட்பரின் பாதமும் சேராவிடில்,
தோல்வியே நேரிடும் போராட்டத்தில்;
இயேசுவே வல்லவர்,
இயேசுவே நல்லவர்,
இயேசுவே ஆண்டவர்;
வா, பாவி, வா.

4. மோட்சத்தின் பாதையில் முன் செல்லுவாய்;
சிற்றின்ப வாழ்வினில் ஏன் உழல்வாய்?
வாடாத கிரீடமும்
ஆனந்தக் களிப்பும்
பேர் வாழ்வும் பெறவும்
வா, பாவி, வா.

5. சேருவேன் இயேசுவே, ஏற்றுக் கொள்வீர்;
பாவமும் அறவே சுத்தம் செய்வீர்;
அப்பாலே மோட்சத்தில்
ஆனந்தக் கடலில்
மூழ்கிப் பேரின்பத்தில்
கெம்பீரிப்பேன்.

பாமாலை - 154- விருந்தைச் சேருமேன், Pamalai Songs Lyrics PPT Pamalaigal songs lyrics, Virundhai Seyrumeyn songs, Virundhai Seyrumeyn songs lyrics

Sign in to access this feature Sign Up

Virundhai Seyrumeyn -154- Pamalai Song Lyrics PPT Lyrics in English

Virundhaich serumene, azhaikkiraar
Aakaaram paarumene, poshippaar
Thaagaththaith theerkkavum
Yesuvin maarbilum
Saayndhilaippaaravum
Vaa, paavi, vaa

Ootrandai seravum, jeevan undaam
Paadum visaaramum neengum ellaam
Nambi vandhorukku
Thirupthi undaayitru
Jeevaattrin andaikku
Vaa, paavi, vaa

Meetparin paadhamum seraavidil
Tholviyey neridum poraattaththil
Yesuve vallavar
Yesuve nallavar
Yesuve aandavar
Vaa, paavi, vaa

Mokshaththin paadhaiyil mun selluvaai
Sittrinba vaazhvinil yen uzhalvaai
Vaadaadha kreedamum
Aanandha kalippum
Per vaazhvum peravum
Vaa, paavi, vaa

Seruven Yesuve, aetruk kolveer
Paavamum arave suththam seiveer
Appaale mokshaththil
Aanandha kadalil
Moozhgi perinbaththil
Kembirippen

Virundhai Seyrumeyn -154- Pamalai Song Lyrics PPT Lyrics in English (Tanglish)

விருந்தைச் சேருமேன், அழைக்கிறார்
ஆகாரம் பாருமேன், போஷிப்பார்
Virundhai Serumen, Azhaikkiraar
Aagaaram Paarumen, Poshippaar

தாகத்தைத் தீர்க்கவும் இயேசுவின் மார்பிலும்
சாய்ந்திளைப்பாறவும் வா, பாவி, வா
Thaagaththai Theerkkavum Yesuvin Maarbilum
Saayndhilaippaaraavum Vaa, Paavi, Vaa

ஊற்றண்டை சேரவும், ஜீவனுண்டாம்
பாடும் விசாரமும் நீங்கும் எல்லாம்
Ootrandai Seravum, Jeevan Undaam
Paadum Visaaramum Neengum Ellaam

நம்பி வந்தோருக்கு திருப்தி உண்டாயிற்று
ஜீவாற்றின் அண்டைக்கு வா, பாவி, வா
Nambi Vandhorukku Thirupthi Undaayitru
Jeevaatrin Andaiyukku Vaa, Paavi, Vaa

மீட்பரின் பாதமும் சேராவிடில்
தோல்வியே நேரிடும் போராட்டத்தில்
Meetparin Paadhamum Seraavidil
TholviyE Neridum Poraattaththil

இயேசுவே வல்லவர், இயேசுவே நல்லவர்
இயேசுவே ஆண்டவர், வா, பாவி, வா
Yesuve Vallavar, Yesuve Nallavar
Yesuve Aandavar, Vaa, Paavi, Vaa

மோட்சத்தின் பாதையில் முன் செல்லுவாய்
சிற்றின்ப வாழ்வினில் ஏன் உழல்வாய்
Mokshaththin Paathaiyil Mun Selluvaai
Sitrinba Vaazhvinil Yen Uzhalvaai

வாடாத கிரீடமும் ஆனந்தக் களிப்பும்
பேர் வாழ்வும் பெறவும் வா, பாவி, வா
Vaadaadha Kreedamum Aanandha Kalippum
Per Vaazhvum Peravum Vaa, Paavi, Vaa

சேருவேன் இயேசுவே, ஏற்றுக் கொள்வீர்
பாவமும் அறவே சுத்தம் செய்வீர்
Seruven Yesuve, Etrukolveer
Paavamum Arave Suththam Seiveer

அப்பாலே மோட்சத்தில் ஆனந்தக் கடலில்
மூழ்கிப் பேரின்பத்தில் கெம்பீரிப்பேன்
Appaale Mokshaththil Aanandha Kadalil
Moozhgi Perinbaththil Kembirippen

Virundhai Seyrumeyn -154- Pamalai Song Lyrics PPT Lyrics in English (Song Meaning)

விருந்தைச் சேருமேன், அழைக்கிறார்
ஆகாரம் பாருமேன், போஷிப்பார்
Come To The Feast, He Calls
He Will Feed And Nourish You

தாகத்தைத் தீர்க்கவும் இயேசுவின் மார்பிலும்
சாய்ந்திளைப்பாறவும் வா, பாவி, வா
To Quench Your Thirst, Lean On Jesus’ Breast
Come, O Sinner, Come

ஊற்றண்டை சேரவும், ஜீவனுண்டாம்
பாடும் விசாரமும் நீங்கும் எல்லாம்
Come To The Fountain, There Is Life
All Sorrow And Burden Will Cease

நம்பி வந்தோருக்கு திருப்தி உண்டாயிற்று
ஜீவாற்றின் அண்டைக்கு வா, பாவி, வா
Those Who Believe Are Satisfied
Come To The Living Stream, O Sinner

மீட்பரின் பாதமும் சேராவிடில்
தோல்வியே நேரிடும் போராட்டத்தில்
If You Do Not Reach The Savior’s Feet
Defeat Awaits In The Battle

இயேசுவே வல்லவர், இயேசுவே நல்லவர்
இயேசுவே ஆண்டவர், வா, பாவி, வா
Jesus Is Mighty, Jesus Is Good
Jesus Is Lord, Come O Sinner

மோட்சத்தின் பாதையில் முன் செல்லுவாய்
சிற்றின்ப வாழ்வினில் ஏன் உழல்வாய்
Walk Forward In The Path Of Salvation
Why Struggle In Fleeting Pleasures

வாடாத கிரீடமும் ஆனந்தக் களிப்பும்
பேர் வாழ்வும் பெறவும் வா, பாவி, வா
To Gain An Unfading Crown And Eternal Joy
Come, O Sinner, Come

சேருவேன் இயேசுவே, ஏற்றுக் கொள்வீர்
பாவமும் அறவே சுத்தம் செய்வீர்
I Will Come, Jesus, Receive Me
Cleanse My Sin Completely

அப்பாலே மோட்சத்தில் ஆனந்தக் கடலில்
மூழ்கிப் பேரின்பத்தில் கெம்பீரிப்பேன்
In Heaven’s Blissful Sea
I Will Rejoice In Great Joy

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create